Advertisment

பிரம்மாண்ட கட்டவுட், பால்குடம், சிலம்பாட்டம், - கொண்டாட்டத்தில் சூரி ரசிகர்கள்

soori garudan release fans celebration

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertisment

இப்படம் இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் சூரி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சூரியின் சொந்த ஊரான மதுரையில் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி படத்தை வரவேற்றனர். சூரியின் நற்பணி இயக்கம் தலைமையில் பெண்கள் பலரும் பால்குடம் எடுத்து திரையரங்கை நோக்கி அணிவகுத்தனர்.

Advertisment

திரையரங்கில் சூரிக்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட்டவுட்டுக்கு மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் டீஜே, சிலம்பாட்ட அணிவகுப்பும் நடந்தது. சூரி நடிப்பில் வெற்றிமாறனின் விடுதலை 2, ராமின் ஏழு கடல் ஏழு மலை, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் அடுத்ததடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

actor soori madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe