soori durai senthilkumar titled as garudan

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘விஸ்வாசத்துல மனுசனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா, எப்பவுமே நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, ஜெயிக்கிறது என்னைக்குமே என் சொக்கன் தான்’ என்ற வசனத்தோடு வரும் நிலையில் சசிக்குமாருக்கும், உன்னி முகுந்தனுக்கும் விஸ்வாசமாக சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளது போல் அமைந்துள்ளது.

Advertisment