ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு உணவளித்த நடிகர் சூரி!

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி பொது மக்களை மகழ்விக்கவும், அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

hrh

இந்நிலையில் கரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25-கிலோ அரிசி 100-மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25-கிலோ அரிசி 20- மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு உணவளிக்கிறார். நடிகர் சங்கத்திற்கு கரோனா நிவாரண உதவியாக ரூபாய் 1-லட்சம் ரூபாயை நடிகர் சூரி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

soori
இதையும் படியுங்கள்
Subscribe