உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 53,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் நடப்பவற்றை, தினசரிஒரு வீடியோ வீதம்பதிவிட்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒன்பதாவது நாளான இன்று, சூரி தன்னுடைய குழந்தைகளிடம் இருந்து ஆங்கிலம் படிப்பது எப்படி என்று கற்று வருகிறார். மேலும், படித்த குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்கலை சொல்லி தாருங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.