Advertisment

"இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு" - நடிகர் சூரி தகவல்!

bffdnfd

Advertisment

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் சூரி தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..

"நானும் என் மனைவியும் கரோனா தடுப்பூசி போட்டு ஆறு நாளாச்சு. எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு. இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க. உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக! #GetVaccinated" என கூறியுள்ளார்.

actor soori
இதையும் படியுங்கள்
Subscribe