Advertisment

சூர்யா படக்குழுவினரோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

soori

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, ‘விடுதலை’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘அண்ணாத்த’, ‘டான்’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். நேற்று (27.08.2021) நடிகர் சூரியின் பிறந்த தினமாகும். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துதெரிவித்த நிலையில், நடிகர் சூரி தன்னுடைய பிறந்தநாளை சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூரி, சூர்யா, பாண்டிராஜ், சத்யராஜ் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

actor soori
இதையும் படியுங்கள்
Subscribe