Skip to main content

நடிகர் தவசிக்கு சூரி, சிவகார்த்திகேயன் நிதியுதவி!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

thavasi

 

 

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி.

 

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது, ரசிக்கப்பட்டது.

 

இவர் பாரதிராஜாவின், 'கிழக்குச் சீமையிலே' படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். 

 

கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்தார்.

 

அவரின் நிலையை அறிந்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன், அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். 

 

இந்நிலையில் அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர். நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், தவசி மற்றும் அவரது உதவியாளருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்றும் நடிகர் சூரி தெரிவித்தார். அவருக்கு தேவையான அடுத்தடுத்த உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். அதேபோல் நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர் மன்ற தலைவர் மோகன், தவசியை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்