soori about vetrimaaran

தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களைக் கொடுப்பவர்கள் வெகு சிலரே. அதில் இந்த காலகட்டத்தில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம் - 6, விசாரணை - 3, அசுரன் - 2 என மொத்தம் 6 (ஆந்தாலஜி படமான பாவக் கதைகள் தவிர்த்து) படங்களில் 11 தேசிய விருதுகளைத்தமிழ் சினிமாவிற்கு பெற்றுத்தந்துள்ளார். மேலும் விசாரணை படம் உலகப் புகழ் பெற்ற 89வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வு செய்யப்பட்டது.

Advertisment

கடைசியாக விடுதலை பாகம் -1 படத்தை எடுத்த அவர், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் வெற்றிமாறன். அவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில், சூரி தனது எக்ஸ் தளபக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அந்தப் பதிவில், "எளிய மக்கள் வாழ்வியல் பேசும், உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும், மாபெரும் படைப்பாளி அண்ணன் வெற்றிமாறனுக்குபிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment