Advertisment

"கரோனாக்கு நீங்க குடுக்குற கசாயம் கறி குழம்பு மாதிரி சும்மா ஜம்முனு இருக்கு" - நடிகர் சூரி பாராட்டு!

gdsgdsg

கரோனாவால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் தமிழக அரசு துணையோடு சித்த மருத்துவம் மூலமாக காரோனாவுக்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதை நடத்தி வரும் மருத்துவர் வீரபாபு அங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்தி அனுப்பி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"அனைவருக்கும் வணக்கம்

எல்லாரையும் ஆறு மாசமா முடக்கி போட்டுடுச்சு இந்த பாழாப்போன கரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் சமூக இடைவெளி விட்டு பேச வேண்டியிருக்கு. உலகத்துக்கே இதுதான் நிலைமை. இந்த சூழலில் சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் சித்த மருத்துவர் திரு வீரபாபு, அவர்கள் அவரது மூலிகை கசாயம் மூலமாக பாதிக்கப்பட்ட 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறாராம். குறிப்பா இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படலயாம்.எல்லோரும் எட்ட நின்னு பாக்குறப்போ நீங்க மட்டும் கிட்ட நின்னு தொட்டு பரிசோதிக்கும்போது, கண்ணுக்கு தெரியுற சாமி ஆகவே உங்களை கும்பிட தோணுது. அப்படின்னு வைத்தியம் பார்த்துக்கிட்டு வர்ற அத்தனை பேரும் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார். இத்தனை பேரையும் காப்பாற்ற, காப்பாற்றிக் கொண்டு இருக்கிற உங்களையும், உங்க கூட வேலை செய்தவர்களையும் அந்த ஆத்தா மதுரை மீனாட்சி எப்பவும் காப்பாற்றுவார். முக்கியமா நீங்க குடுக்குற கசாயம் கறி குழம்பு மாதிரி சும்மா ஜம்முனு இருக்காம். வாழ்த்துகள் வீரபாபு சார்" என கூறியுள்ளார்.

Advertisment

soori actor soori
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe