Skip to main content

"கரோனாக்கு நீங்க குடுக்குற கசாயம் கறி குழம்பு மாதிரி சும்மா ஜம்முனு இருக்கு" - நடிகர் சூரி பாராட்டு!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
gdsgdsg

 

 

கரோனாவால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் தமிழக அரசு துணையோடு சித்த மருத்துவம் மூலமாக காரோனாவுக்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதை நடத்தி வரும் மருத்துவர் வீரபாபு அங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்தி அனுப்பி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"அனைவருக்கும் வணக்கம்

 

எல்லாரையும் ஆறு மாசமா முடக்கி போட்டுடுச்சு இந்த பாழாப்போன கரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் சமூக இடைவெளி விட்டு பேச வேண்டியிருக்கு. உலகத்துக்கே இதுதான் நிலைமை.  இந்த சூழலில் சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் சித்த மருத்துவர் திரு வீரபாபு, அவர்கள் அவரது மூலிகை கசாயம் மூலமாக பாதிக்கப்பட்ட 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறாராம். குறிப்பா இதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படலயாம். எல்லோரும் எட்ட நின்னு பாக்குறப்போ நீங்க மட்டும் கிட்ட நின்னு தொட்டு பரிசோதிக்கும்போது, கண்ணுக்கு தெரியுற சாமி ஆகவே உங்களை கும்பிட தோணுது. அப்படின்னு வைத்தியம் பார்த்துக்கிட்டு வர்ற அத்தனை பேரும் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார். இத்தனை பேரையும் காப்பாற்ற, காப்பாற்றிக் கொண்டு இருக்கிற உங்களையும், உங்க கூட வேலை செய்தவர்களையும் அந்த ஆத்தா மதுரை மீனாட்சி எப்பவும் காப்பாற்றுவார். முக்கியமா நீங்க குடுக்குற கசாயம் கறி குழம்பு மாதிரி சும்மா ஜம்முனு இருக்காம். வாழ்த்துகள் வீரபாபு சார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

புதிய வாக்காளர்களுக்கு சூரி சொன்ன அறிவுரை

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
soori advise to first time voters

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார். 

அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார். 

உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.