/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Director_Vishnuvardhan_at_the_Grahanam_Movie_Launch.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நடிகர் சூரி அவ்வப்போது தன் குழந்தைகளுடன் நகைச்சுவை கலந்த கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவர் தற்போது கரோனா ஊரடங்கு குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''தற்போதைய நிலவரம் என்று முடியும் கரோனாவின் கலவரம்...'' எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us