mahaan

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சூறையாட்டம் என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு முத்தமிழ் வரிகள் எழுத, வி.எம்.மகாலிங்கம் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர்.