சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து ரிலீஸுக்கு தயாராகி வரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்னா பாலமுரளி நடிக்கிறார்.

Advertisment

maara

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் இந்த படத்தில் டீஸர் வெளியாகி வைரலானது. அதில் வந்த மாறா தீமும் ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் இசயமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மாறா தீம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளை மாலை நான்கு மணிக்கு தமிழிலும் தெலுங்கிலும் இந்த தீம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தின் கதை ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் பின்னணி வேலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.