சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப்போற்று'. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்ற நிலையில் ரிலீஸுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
அண்மையில் இப்படத்தின் டீஸரை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து முதல் பாடலான வெய்யோன்சில்லி பாடலை விமானத்தில் பறந்துகொண்டே நடுவானில் வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை முடிந்து படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை இப்பட இயக்குனர் சுதா கொங்காரா, ''சூரரைப்போற்றுவுடன் உயரமாகப் பறக்க இருக்கிறீர்கள். நம் மாறா ஆக்சனுக்கு தயாராகிவிட்டார்'' என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சூரரைப்போற்று 'யு' சான்றிதழ் வாங்கிய படத்தைப் பதிவிட்டுள்ளார். இப்படம் ஊரடங்குமுடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.