Advertisment

திரையரங்கில் வெளியாகும் 'சூரரைப் போற்று' - ரசிகர்கள் உற்சாகம்!

suriya

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக படம் ஓடிடி தளத்தில் வெளியானது. நீண்ட நாட்களாக மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியாமல் தவித்து வந்த சூர்யாவிற்கு, இப்படம் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பைக் கண்டு வியந்து போன ரசிகர்கள், இப்படத்தை திரையரங்கில் காணமுடியாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டனர்.

Advertisment

இந்த நிலையில், 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது.இதில், பிப்ரவரி 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, 'சூரரைப் போற்று' படம் திரையிடப்படவுள்ளது. இதற்கு, ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisment

மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படவிருப்பதால், டிக்கெட்டை எடுக்க ரசிகர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

soorarai potru actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe