soorarai pottru movie get 8 FilmfareAwardsSouth

Advertisment

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை பெற்றதோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர்விருது வழங்கும் விழாவில், 'சூரரைப் போற்று' திரைப்படம் 7 விருதுகளை வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த இயக்குநர் (சுதா கொங்கரா), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர்(கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி( தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில்விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

இதேபோன்று, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படமும், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பிலிம்பேர்விருதுகளை குவித்துள்ளது.