இந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

suriya

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்கவுள்ளார். பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

actor suriya soorarai potru
இதையும் படியுங்கள்
Subscribe