Advertisment

"ஜெயிச்சிட்டோம் மாறா...” - விருது மழையில் 'சூரரைப் போற்று'

soorarai pottru film wins 6 awards osaka tamil International Film Festival

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானதுஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதோடுபல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

Advertisment

அந்த வகையில்ஜப்பானின்ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் மேலும் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது. அதில் சிறந்த இயக்குநர் விருது'சூரரைப்போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி பிரகாஷுக்கும், சிறந்த கலை இயக்குநர்விருது ஜாக்கிக்கும், சிறந்ததயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 விருதுகளைவென்றுள்ளது.இதே போன்று விருமாண்டி இயக்கத்தில் வெளியான 'க/பெ ரணசிங்கம்' படத்தில் நடித்தற்காகஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

GV prakash sudha kongara actor surya soorarai potru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe