சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூரரைப்போற்று. மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெளியான நாள் முதலிலிருந்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ட்விட்டரில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பலரும் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் சூர்யா ரசிகர்கள் இன்னும் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த சூர்யா ரசிகர் கார்த்தி என்பவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயரான ‘மாறா’ என்ற பெயரை வைத்து சூர்யா மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.