
நடிகர் சூர்யா இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' என்னும் படத்திலிருந்து 'காட்டுப்பயலே' என்னும் பாடல் வெளியிடப்போவதாக முன்னரே படக்குழு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'காட்டுப்பயலே' பாடல் ஒரு நிமிட வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.
சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Follow Us