Advertisment

திரையரங்குகளில் சூர்யாவின்  'சூரரைப் போற்று'!

vaadivasal

Advertisment

சூர்யாநடித்து, தயாரித்து தீபாவளிக்குவெளியானபடம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கராஇயக்கியஇப்படம், அமேசான்ப்ரைம்ஒ.டி.டி. தளத்தில்வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைபெற்றது. சூர்யாவுக்கு, தமிழில்மட்டுமில்லாது, தெலுங்கிலும் பெரியரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே,சூர்யாவின் படங்கள்தெலுங்கில்டப்செய்யப்பட்டு வெளியிடப்படும். சூரரைப் போற்று படமும், தெலுங்கில்வெளியாகிவுள்ளது.

கரோனாதோற்று பரவலால்மூடப்பட்டதிரையரங்குகள், தமிழகத்தில் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மல்ட்டிபிளக்ஸ்திரையரங்குகள் மட்டுமேதிறக்கப்பட்டுள்ளன. இருப்பினும்ரசிகர்கள்எதிர்பார்த்த அளவில் வரவில்லை.

இந்தநிலையில்ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், டிசம்பர் 11 ஆம் தேதி முதல்சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. எனவே ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைப்பதற்காக, சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தை திரையரங்கில் வெளியிடும்முயற்சியில்,ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலதிரையரங்கு உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். சூரரைப் போற்று படத்தின் உரிமை அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டுள்ளதால், அமேசான் ஒ.டி.டி தளத்திடமிருந்துபிரத்யேக அனுமதி வாங்க, அத்திரையரங்கு உரிமையாளர்கள் முயன்று வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

actor suriya soorarai potru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe