Advertisment

சொன்னதுபோல் நிதியுதவி செய்த 'சூரரைப் போற்று' டீம்!

gga

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisment

இத்தொகையை பெப்ஸியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், எண்பது லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுபெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்ததொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகிக்கித்தார். சூர்யா, 2D பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர், கற்பரபூர சுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புதயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சுரேஷ்காமாட்சி லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

actor surya soorarai potru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe