காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது நடித்து வந்த படம் சூரரைப்போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகும் படம் இது . என்.ஜி.கே வெளியானபோதே இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

Advertisment

soorarai potru

இந்நிலையில் படத்தின் தன்னுடன் பணிபுறிந்தவர்களுக்கு தங்ககாசை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் சூர்யா. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் பிரதான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது இப்படத்தின் முழு ஷூட்டிங் முடைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.