திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டுவெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ். அர்ஜுன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.