இந்தியத் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர்சோனுசூட். அனுஷ்காவுடன் 'அருந்ததி', சிம்புவுடன் 'ஒஸ்தி'உள்ளிட்ட படங்களிலும் வில்லனாகநடித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்தசோனுசூட்,கரோனாஊரடங்கின்போது புலம்பெயர்தொழிலாளர்கள், தங்களதுசொந்தஊருக்குச் செல்லஉதவினார். மேலும் சமூக வலைத்தளம் மூலமாகக் கல்வி, மருத்துவம் தொடர்பாகஉதவி கேட்பவர்களுக்கும் தனதுஉதவிக்கரத்தை நீட்டி வருகிறார்.
இந்த நிலையில், சோனுசூட்டை பஞ்சாப்மாநிலத்தின் அடையாளமாக நியமிக்க வேண்டுமென, பஞ்சாப்மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கருணா ராஜு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரையை இந்தியத் தேர்தல் ஆணையம்தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப்மக்களிடம்விழிப்புணர்வைஏற்படுத்த, சோனு சூட்டைபஞ்சாப்மாநிலத்தின்அடையாளமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சோனு சூட், பஞ்சாப் மாநில அடையாளமாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.