sonu sood voted his vote in maharashtra elections

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று(20.11.2024) நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கும், உத்தரப் பிரதேசத்தின் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் திரை பிரபலங்கள் அக்‌ஷய் குமார், அனுபம் கேர், சோனு சூட், ராஜ்குமார் ராவ், பூஜா பட், கபீர் கான், ஜோயா அக்தர், ஜான் ஆபிரகாம், ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

sonu sood voted his vote in maharashtra elections

Advertisment

மும்பை பாந்த்ராவில் தனது வாக்கினை செலுத்திய அக்‌ஷய் குமார், “மூத்த குடிமக்களுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. தூய்மை பராமரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என செய்தியாளர்களிடம் கூறினார். இவர் இந்திய குடியுரிமை வாங்கியப் பின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக வாக்கு செலுத்திய நிலையில் இரண்டாவது முறையாக தற்போது இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளார். இதனிடையே மும்பையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சோனு சூட், “வாக்களிப்பது நம் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. இது நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இன்றைய நாளை விடுமுறையாக கொண்டாட வேண்டாம். வெளியே வந்து வாக்களியுங்கள்” என்றார்.