/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_6.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக சோனு சூட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னரே தனிமைப்படுத்திக் கொண்டேன். தற்போது உரிய சிகிச்சை எடுத்து வருகிறேன். கவலைப்பட வேண்டாம். இந்தத் தனிமைக்காலம் உங்களது பிரச்சனைகளைத் தீர்க்க எனக்குப் போதுமான நேரத்தைக் கொடுத்துள்ளது. உங்கள் அனைவருக்காகவும் நான் எப்போதும் இருப்பேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து பலரது பாராட்டையும் சோனு சூட் பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)