தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர்சோனு சூட். கரோனாஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார். இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு பாராட்டு குவிந்தது. இந்தியாவின் பிரபலமான நபர்களில்ஒருவராக மாறினார்.
இந்நிலையில் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இளைஞர்ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மேகா என்கிற மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் நடிகர்சோனு சூட் தனது காரில் சென்று கொண்டிருந்த போது மேம்பாலத்தில் கார் மோதிவிபத்துக்குள்ளானது. இதை பார்த்த சோனு சூட் விபத்துக்குள்ளானகாரில், மயங்கி கிடந்த இளைஞரை மீட்டு தனது காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்துதற்போது அந்த இளைஞர் நலமாக உள்ளார். இந்த சம்பத்தை நேரில் பார்த்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில்பகிர்ந்த நிலையில் நடிகர் சோனு சூட்டுக்குபலரும் பாராட்டுக்களைதெரிவித்து வருகின்றனர்.