sonu sood

தன்னுடைய திரைப் பயணத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி, பல வருட முயற்சிக்குப் பின்னர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வருகிறார் சோனு சூட்.

Advertisment

கரோனா காலகட்டத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து அனுப்பி வைத்தார். இதன்பின் ட்விட்டரில் அவருக்குப் பலர் உதவிகள் கேட்டு கோரிக்கை வைக்க, அவற்றையும் செய்துகொடுத்தார் சோனு.

Advertisment

அண்மையில்கூட நடிகர் விஷால் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவரை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்துமொழி சினிமா துறையிலும்ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், சோனு சூட்டுக்கு நடிக்க வாய்ப்புகள் வருகிறது. கால்ஷீட் கேட்டு அணுகியபோது, தனது சம்பளத்தை இரண்டு மடங்காக ஏற்றிவிட்டதாகவும், ஏற்கனவே இரண்டு கோடி சம்பளம் வாங்கிவந்த சோனு, தற்போது நான்கு கோடி கேட்பதாகவும் தகவல் பரவியுள்ளது.

பாலிவுட்டை தாண்டி டோலிவுட்டில் அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.