Skip to main content

மகள்களை வைத்து ஏர் உழுத விவசாயிக்கு ட்ராக்டர் அனுப்பிவைத்த சோனு!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
tractor

 

 

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலரும் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். சொந்த ஊர்களைவிட்டு வேலைக்காக புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களை, அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப மிகவும் சிரமப்பட்டு பேருந்துகளை தயார் செய்து அனுப்பினார். அதேபோல தொடர் வண்டி டிக்கெட் எடுத்து செல்ல முடியாதவர்களுக்கு, டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பினார். இவ்வாறு சிரமத்திலிருக்கும் அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் சோனு.

 

இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி என்கிற ஊரில் வசித்து வருகிறார் நாகேஸ்வர் ராவ். திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்தவருக்கு ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவகாலம் தொடங்கியுள்ளதால், சொந்த ஊரில் விவசாய வேலைகளை தொடங்குவதற்கு ட்ராக்டரை வாடகைக்கு எடுத்து உழும் அளவிற்கு வறுமை வாட்டியுள்ளது. 

 

 

 

உழவு மாடுகளையும் பயன்படுத்த வழியில்லை என்பதால் விவசாயி நாகேஸ்வர் ராவ், தனது இரண்டு மகள்களையும் மாடுகள் போல் களப்பையில் பூட்டி ஏர் உழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்,  ஏர் உழுவதற்கு அடுத்த நாளே ட்ராக்டர் வழங்கப்படும் என்றும், அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும் என்றும் பதிவிட்டிருந்தார். நேற்று மாலைக்குள் அந்த விவசாயிக்கு ட்ராக்டர் அனுப்பி வைக்கப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதேபோல அந்த விவசாயிக்கு ட்ராக்டர் அனுப்பிவைத்து, அவர்களின் கஷ்டத்தை போக்கியுள்ளார் சோனு. வரிசையாக மக்களுக்கு உதவி புரிந்து வரும் சோனுவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சோனு சூட்டை வாழ்த்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்