sonu sood

Advertisment

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் பலரும் தங்களின் தினசரி வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

தொடக்கத்தில் தங்களது வேலைக்காக வட இந்தியாவிலிருந்து, தென்னிந்தியாவிற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரம் கி.மீ. நடந்தே சொந்த ஊர் சென்றனர்.

அந்த சமயத்தில் சொந்த ஊர் செல்ல கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவினார் நடிகர் சோனு சூட். சுமார் 20,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகள், ரயில், விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

Advertisment

இதுமட்டுமல்லாது ட்விட்டரில் தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உடனடியாக உதவி வருகிறார். அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மாமனாருக்கு உதவி வேண்டி உ.பியை சேர்ந்த பெண் ஒருவர் ட்விட்டரில் சோனுவிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதில், “என் மாமனாருக்கு பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் படுக்கை தேவை. எங்களிடம் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருபவர்களும் இருக்கிறார்கள். எங்களால் அனுமதி பெற முடியவில்லை. ஐ.சி.யு.வில் படுக்கை மட்டும்தான் தேவை” என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த சோனுசூட் “விரைவில் இடம் கிடைக்கும். கிடைத்தவுடன் சொல்லவும்” என்று ட்விட் போட்டுள்ளார். இதனால்பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் சோனு.