/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/911_2.jpg)
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்நடித்துப்பிரபலமடைந்தவர் நடிகர்சோனுசூட்.கரோனாஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார். இதனால் இந்தியா முழுவதும்அவருக்குப்பாராட்டு குவிந்தது. அதன் பிறகு இந்தியாவின் பிரபலமான நபராகமாறிப்போனசோனுசூட் தொடர்ந்து ஏழை எளியோருக்குஉதவிகளைச்செய்து வருகிறார்.
இந்நிலையில்பீகாரைச்சேர்ந்த சிறுமிசௌமுகிகுமாரி உதவி செய்துள்ளார். சிறுமிசௌமுகிகுமாரி பிறக்கும் போதே 4 கால்கள் மற்றும் 4 கைகளுடன் பிறந்தார். இதனால் பெரும் அவதிப்பட்டு வந்த சிறுமிக்குசோனுசூட்டின் உதவி மூலம் குஜராத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தேவையற்ற 2 கால்கள் மற்றும் 2 கைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு முன், பின்எனசிறுமியின்புகைப்படத்தைபகிர்ந்து, 7 மணி நேரமாகநடைபெற்று வந்த அறுவை சிகிச்சைவெற்றிகரமாகமுடிந்தது எனத்தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்துசோனுசூட்டின் இந்தசெயலுக்குபலதரப்பில் இருந்தும்பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)