sonu

Advertisment

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அண்மையிலிருந்துதான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முதல் லாக்டவுன் சமயத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல மிகவும் சிரமப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், வீடு திரும்ப பல உதவிகளை செய்தார் சோனு சூட். இதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் பலருக்கும் உதவி புரிந்துவருகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்த சமயத்தில் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஆகியவை குறித்து பல்வேறு தேதிகள் மாற்றம் நடந்தது.

Advertisment

இறுதியாக செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.

இந்த தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இந்த கரோனா அச்சுறுத்தலில் தேர்வை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர், முக்கிய பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சோனு சூட் தற்போது தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில் அதை மீறி தேர்வுகள் நடந்தால் மாணவர்களுக்கு உதவ வேண்டும், தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். அதில், "ஒருவேளை ஜே.இ.இ, நீட் தேர்வுகள் நடந்தால், அதை எழுத வேண்டிய, பிஹார், அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருக்கும் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

இதனை தொடர்ந்து பதிவிட்ட ட்வீட்டில், "ஜேஇஇ, நீட் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களே, நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் எங்காவது சிக்கியிருந்தால் எந்த பகுதிக்குபயணப்பட வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். தேர்வு மையத்துக்கு சென்று சேர நான் உங்களுக்கு உதவுகிறேன். வசதிகள் இல்லை என்பதால் யாரும் தேர்வைத் தவறவிடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.