sonu

Advertisment

கரோனாவால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பலரும் ஏழ்மையில் தவித்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல பணமின்றி, போக்குவரத்து இன்றி நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் சோனு சூட். மேலும், சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

அண்மையில்கூட ரஷ்யாவில் படித்துவந்த தமிழக மாணவர்கள் வீடு திரும்ப தனி விமானம் அமைத்து உதவி செய்தார். ஆந்திராவில் தனது இரு மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கிக் கொடுத்து உதவி செய்தார். இதுபோல பலர் கேட்கும் உதவிகளைச் செய்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில்தான், அவருக்கு இதுவரை 32 ஆயிரம் பேர் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் என்னால், முடிந்தவரை உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது, ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு வீடும், கர்நாடகாவில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு காய்கறிக் கடையும் வைக்க உதவியிருக்கிறார்.