Advertisment

''மருத்துவர்களுக்கு என் 6 மாடி ஹோட்டலை இலவசமாக வழங்குகிறேன்'' - சிம்பு பட வில்லன் உதவி!

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் தமிழகத்திலும் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளின் பற்றாக்குறையைப் போக்க அரசியல் பிரபலங்கள், உட்பட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடு, திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Advertisment

geg

இந்நிலையில் சிம்புவின் ஒஸ்தி, பிரபுதேவாவின்தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட் தனது ஹோட்டலை மருத்துவப் பணியாளர்களுக்காக வழங்கவுள்ளதாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவு பகலாக உழைக்கும் நம் நாட்டின் மருத்துவப் பணியாளர்களுக்கு எனது பங்கைச் செய்வது பெரிய கவுரவம். மும்பையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் அவர்களுக்கு ஓய்வு தேவை. இதற்காக மும்பையில் இருக்கும் எனது 6 மாடி ஹோட்டலை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க இலவசமாக வழங்குகிறேன். இந்த முன்னெடுப்பு குறித்து மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது" எனக் கூறியுள்ளார்.

Simbu sonu sood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe