Published on 12/08/2020 | Edited on 12/08/2020

பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரான காமெடி நடிகர் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்த் திரையுலகில் கரோனா காரணமாக நிகழும் முதல் மரணம் இது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகை சோனியா அகர்வால் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சுவாமிநாதன் சார். #புதுப்பேட்டை #ஓருநாள்ஓருகனவு. நான் பணியாற்றிய மிக இனிமையான தயாரிப்பாளர்களில் ஒருவர் நீங்கள்.. உங்கள் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்" என கூறியுள்ளார்.