Advertisment

சோனியா அகர்வால் நடிக்கும் ‘SSHHH’!

scsacsa

‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி படத்தினைப் போன்று தமிழில் காமத்தினைப் பேசுபோருளாக கொண்டு உருவாகும் முதல் ஆந்தாலஜி திரைப்படம் ‘SSHHH’. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிப்பதோடு, படத்தின் நான்கு கதைகளில் ஒரு பகுதியினை இயக்குகிறார். மற்ற மூன்று கதைகளைபிருத்வி ஆதித்யா (‘க்ளாப்’ படத்தின் இயக்குநர்), வாலி மோகன் தாஸ் (அறிமுகம்), ஹரீஷ் GY (அறிமுகம்) ஆகியோர் இயக்குகின்றனர்.

Advertisment

இப்படத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான ஶ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப், அறிமுக நடிகர் மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். எக்சலண்ட் பிக்சர் பாக்ஸ் நிறுவனம் சார்பில் விவேக் ரவிசந்திரன் மற்றும் டயானா பிக்சர்ஸ் சார்பில் திரு. சுரேஷ் நல்லுசாமி இப்படத்தினை இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு மிகவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Advertisment

sonia agarwal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe