Published on 04/02/2019 | Edited on 04/02/2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 'இளையராஜா 75' நிகழ்ச்சி இரண்டு நாட்களாக கோலாகலமாக நடந்தது. இரண்டாம் நாளான நேற்று நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது இளையராஜா இசையில் மொத்தம் 34 பாடல்கள் அரங்கேறின. அந்த பாடல்கள் என்ன..? அதை யார் யார் எல்லாம் பாடினார்கள் என்று பட்டியல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.