Advertisment

'இனி எனக்கு ட்விட்டர் வேணாம்' - திடீரென ட்விட்டரில் இருந்து விலகிய தனுஷ் பட நாயகி 

sonam

அனில் கபூரின் மகளும் தனுஷ் நடித்த 'ராஞ்சனா' படத்தின் நாயகியுமான சோனம் கபூர் 'சஞ்சு' படத்தையடுத்து 'ஏக் லடக்கி கோ தேகா தோ ஐஸா லகா' மற்றும் துல்கர் சல்மானுடன் 'ஜோயா பேக்டர்' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் ட்விட்டர் சமூக வலைதளதில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தற்போது அறிவித்துள்ளார். அதில்.. "சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். ட்விட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும்" என பதிவிட்டுள்ளார். சோனம் கபூர் தீடிரென்று இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு குறிப்பிடத்தக்க சம்பவம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் மும்பையில் சுற்று சூழல் சீர்கேடு குறித்து சோனம் சமீபத்தில் ட்விட்டரில் போட்ட பதிவுக்கு எதிராக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவையடுத்தே சோனம் கபூர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

sonamkapoor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe