Advertisment

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக சோனம் கபூர் எடுத்த முடிவு 

sonam kapoor

Advertisment

பிரபல ஹிந்தி நடிகர் அனில்கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை வரும் மே மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் தன் பெரியம்மா ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருக்கிறார் நடிகை சோனம் கபூர். மும்பையிலேயே எளிமையாக நடக்கும் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.சோனம் கபூரின் திருமணம் எளிமையாக நடந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சியை மும்பை, டெல்லி ஆகிய இரண்டு நகரங்களில் மிக சிறப்பாக நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், ஸ்ரீதேவியின் பட பாடல்களுக்கு அவருடைய மகள் ஜான்வி கபூர் நடனம் ஆடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

sridevistatue sridevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe