Rs 1.41 crores robbery Sonam Kapoor Anand Ahuja's house Delhi

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனதுகணவருடன் மும்பையில் வசித்து வரும் சோனம் கபூர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

Advertisment

இந்நிலையில் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவுக்கு சொந்தமான டெல்லிஇல்லத்தில் பணம் மற்றும்நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டில் சோனம் கபூரின்மாமனார், மாமியார் மற்றும் ஆனந்த் அஹுஜாவின் பாட்டி சரளா அஹுஜா ஆகியோர் வசித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த கொள்ளை சம்பவம்நிகழ்ந்துள்ளது. இதில் ரூ. 1.41 கோடி மதிப்பிலானநகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இதுகுறித்து ஆனந்த் அஹுஜாவின் பாட்டி சரளா அஹுஜா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்மூலம் தெரியவந்துள்ளது. மேலும் அந்த புகாரில் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி பணம் மற்றும் நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யும் பொழுது தான் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பணியாளர்கள், தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற மொழி ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.