sonam kapoor anand ahuja new delhi residence theft case 2 person arrested

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனதுகணவருடன் மும்பையில் வசித்து வரும் சோனம் கபூர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

Advertisment

கடந்த பிப்ரவரி மாதம் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவுக்கு சொந்தமான டெல்லிஇல்லத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பணியாளர்கள், தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற மொழி ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் அந்தவீட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் அபர்ணா ரூத் வில்சன் என்பவரைடெல்லி போலீஸ் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் பேரில் அபர்ணா ரூத் வில்சனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் தனது கணவர் ரூத் வில்சனுடன்இணைந்து இந்த கொள்ளைசம்பவத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மீட்க்கும்நடவடிக்கையில்ஈடுபட்டு வருகின்றனர்.