கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைதடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம்கரோனா விழிப்புணர்வைதொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கரோனா வைரஸ் பரவுவதாக செய்தி பரவியதையடுத்து பலரும் தங்கள் செல்ல பிராணிகளை ரோட்டில் அனாதையாக விட்டு விடுவதை கண்டித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

gdg

''செல்லப் பிராணிகளால் கரோனா வைரஸ் பரவுகிறது என்று நம்பி, சிலர் தங்கள் நாய்களைக் கைவிடுவதாக சில தகவல்களைகேள்விப்படுகிறேன். உங்களிடம் சொல்ல என்னிடம் ஒரு செய்தி உள்ளது. நீங்கள் எல்லாம் முட்டாள்கள். நீங்கள் கைவிட வேண்டியது உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற செயல்களையும்தான். நாய்கள் கரோனாவைப் பரப்புவதில்லை. விலங்குகளிடம் அன்பாக இருப்போம்'' என கூறியுள்ளார்.