sona house thief issue

குசேலன், கோ, ஜித்தன் 2 என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனா. கடைசியாக இந்தாண்டு மார்ச்சில் வெளியான பூமர் அங்கிள் படத்தில் நடித்திருந்தார். இவர் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் நிலையில், கொள்ளையர்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் நேற்று மாலை 4 மணிக்கு சுற்று சுவர் ஏறிக் குதித்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்பு வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த நாய் திருடர்களை பார்த்து குறைத்துள்ளது. நாய் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சோனா, அவர்களை பார்த்து கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் சோனாவை கூச்சலிட விடாமல் கத்தி முனையில் அவரை மிரட்டி பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர்.

பின்பு காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார் சோனா. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் சோனா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை அடிப்படையாகக் கொண்டு திருட வந்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.