Skip to main content

'இனி வரும் காலங்களில் இப்படித்தான் நடிப்பேன்' - சோனா முடிவு 

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
sona

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து காமெடியும் செய்திருப்பார். சில காலமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மலையாளத்தில் ஒப்பம் போன்ற மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி விநாயக் நடிப்பில் அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர். கதையும் கதாபாத்திரமும் பிடித்துப்போனதாலும் இதுவரை தான் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டார் சோனா. 'அவதார வேட்டை' கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி வெளியானது. இதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும், இறுதிக்காட்சியில் வரும் சண்டை காட்சியும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள கதைக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாக கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்