Advertisment

அப்பாவின் படத்தை முதன் முறையாக பார்க்கும் மகன்...

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

ngk surya

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவான சினிமா ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Advertisment

இப்படம் வெளியான அன்று நடிகர் சூர்யா மிகவும் நெகிழ்ந்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அவரை அடுத்து இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன், “என்.ஜி.கே. படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த படத்தில் அவ்வளவு குறீயிடுகள் இருக்கிறது என்று பலர் தங்களின் சுய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். சிலருடைய கருத்துக்கு செல்வராகவனும் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வரகவனின் மனைவி கீதாஞ்சலி தன்னுடைய மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முதன்முதலாக தனது அப்பாவின் படத்தை பார்க்க இருக்கிறார் என்று பகிர்ந்துள்ளார்.

Surya selvaraghavan NGK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe