/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-2_34.jpg)
சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ள நடிகர் மாதவனின் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். நீச்சலின் மீது ஆர்வமாக இருக்கும் இவரது மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் நடந்த தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களையும் கைப்பற்றினார்.
இந்நிலையில், சர்வதேச அளவில் வேதாந்த் மாதவன் மீண்டுமொரு தங்க பதக்கம் வென்றுள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதல் நாளில் 1500 மீட்டர் பிரிவில் நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்றாம் நாளில் 800 மீட்டர் பிரிவின் நடந்த இறுதி போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதனை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த் மாதவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)