Skip to main content

“நான் பணத்திற்காகவோ, நடிகர்களுக்காகவோ பாடல் எழுதவரவில்லை” - சினேகன்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

snehan talk about arakkan movie

 

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடிக்க, இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, கவிஞர் சினேகன், இளம் நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், சரண் சக்தி, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

இவ்விழாவில்  பேசிய பாடலாசிரியர் சினேகன்,  “இயக்குநர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார். என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும் போதும் சரி, சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ, பணத்திற்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல்தான் பாட்டு எழுதி தருகிறேன்.

 

ஈழத்தமிழர்களை உலகத்தமிழர்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டதுமே நான் பயந்துவிட்டேன். ஒருமுறை சதுரகிரி மலைக்கு சென்றபோது அங்கே இருக்கும் சித்தர்கள் மூலமாக நேரிலேயே நடந்த அதிசய நிகழ்வு ஒன்றை பார்த்து அதிசயித்தேன். அப்போதுதான் செடிகளுக்கும் பூக்களுக்கும் கூட எவ்வளவு வீரியம் இருக்கிறது என்பது புரிந்தது. இந்த கதையும் அதை எனக்கு உணர்த்தியது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்