/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/snehan_0.jpg)
பிரபல பாடலாசிரியரும் நடிகருமான சினேகன். பிக்பாஸ் சீஸன் 1 போட்டியில் பங்குபெற்ற பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அருண் பாண்டியன் என்பவர் காயமடைந்தார். தற்போது அவருக்கு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து விசாரித்த திருமயம் போலீஸார் கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்திய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)