Advertisment

லாரன்ஸை தொடர்ந்து தீப்பெட்டி கணேசனுக்கு உதவிய சினேகன்!

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவுவதாகச் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும் தீப்பெட்டி கணேசன் நடிகர் அஜித் தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட விடியோவை அஜித்திடம் சேர்ப்பதாக லாரன்ஸ் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி செய்துள்ள பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

gvdgd

"தன் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வசதியில்லை என கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைத்தளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டு இருந்தார். அவரை இன்று சந்தித்து எனது 'சினேகம் செயலகம்' என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப்பொருட்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்துவிட்டு வந்தேன். இதுபோல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்தத் தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

theepetti ganesan snehan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe